search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஜினி காந்த்"

    பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வரவேற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்து உள்ளார். #PMModi #Rajinikanth
    புதுடெல்லி:

    ‘தினத்தந்தி’க்கு அளித்த சிறப்பு பேட்டியின் போது மோடியிடம் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- நடிகர் ரஜினிகாந்தும், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் உள்ள நதிநீர் இணைப்பு திட்டத்தை பாராட்டியுள்ளாரே?...

    பதில்:- அதற்காக நான் ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பொதுவாக அரசியல் தொடர்பான கருத்துகளை கூறுவதில் அவர் யோசிப்பார். ஆனால் இந்த விவகாரத்தில் அவர் கருத்து கூறி இருப்பதற்கு மகிழ்ச்சி. மிகப்பெரிய நடிகர், அவர் சாமானிய மக்களின் தண்ணீர் பிரச்சினையை, பேசி இருப்பது நல்ல விஷயம். அதற்கு நான் நன்றியை கூறுகிறேன்.

    கேள்வி:- அவரது பாராட்டை பா.ஜ.க.வுக்கு ஆதரவு என எடுத்துக்கொள்ளலாமா?

    பதில்:- நான் அவரை 2013, 2014-ல் சந்தித்து பேசினேன். அதன் பிறகு சந்திக்க வில்லை.

    கேள்வி:- நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். ஆனால் கட்சி எதுவும் அவர் தொடங்கவில்லை. ஒரு சகோதரராக அவருக்கு ஏதேனும் ஆலோசனை கூற விரும்புவீர்களா?

    பதில்:- அவர் என்னை நேரில் சந்திக்கும்போது, அது பற்றி பேசுவேன்.

    கேள்வி:- அவரை சினிமாவில் நடிக்க கூறுவீர்களா? அல்லது அரசியலுக்கு வருமாறு ஆலோசனை சொல்வீர்களா?.

    பதில்:- நான் அவருக்கு ஆலோசனையை நேரிலே கூறுவேன். ஊடகம் வாயிலாக ஏன் கூற வேண்டும்?

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். #PMModi #Rajinikanth
    வி‌ஷத்தன்மைக் கொண்ட பாம்பை 10 பேர் சூழ்ந்துக் கொண்டு அடித்தால் பாம்பு பலமானது என கூற முடியுமா? எனவே பா.ஜ.க. ஆபத்தான கட்சிதான் என திருமாவளவன் கூறியுள்ளார். #BJP #Thirumavalavan
    திருவள்ளூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிறப்பு செயற் குழு கூட்டம் திருவள்ளூரில் மாவட்டச் செயலாளர் சித்தார்தன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டிசம்பர் 10-ந்தேதி திருச்சியில் சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து தேசம் காப்போம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெறவுள்ளது.

    சனாதன என்பது நவீன காலத்துக்கு பொருந்தாத இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ்.சின் கோட்பாடு. அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியல் சாசனத்துக்கு உட்பட்ட ஜனநாயகத்தை காப்போம் என்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். இந்த மாநாட்டில் திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்து 1 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும்.

    இந்தியாவில் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு உலகிலேயே உயரமான சிலை இல்லை. பட்டேல் உள்துறை அமைச்சராக இருந்து சுற்றியுள்ள சாம்ராஜ்ஜியங்களை இணைத்து முழு இந்தியாவை உருவாக்கினார். அதனால் அவருக்கு சிலை அமைப்பதில் எவ்வித தவறும் இல்லை.

    அதே நேரத்தில் மகாத்மா காந்திக்கு சிலை அமைக்காமல் பட்டேலுக்கு உயரமான சிலை அமைப்பது ஏற்புடையதல்ல. பட்டேலுக்கு அமைத்த சிலை உலகிலேயே மிக உயர்ந்த சிலை என்ற நிலையை உருவாக்கியதன் மூலம் காந்தியடிகளுக்கு மாற்றாக பட்டேலை பாஜக தூக்கி நிறுத்தியுள்ளது ஏற்புடையதல்ல.

    நடிகர் ரஜினிகாந்திடம் பா.ஜ.க. ஆபத்தான கட்சியா? என்ற கேள்விக்கு, அவர் ஆமாம், இல்லை என்ற பதில் கூறியிருக்க வேண்டும். அதைவிடுத்து 10 கட்சிகளை தனியாக எதிர்த்து நிற்கும் கட்சி என்பதால் பலமான கட்சி என ஒரு சம்மந்தமில்லாத பதிலை கூறியுள்ளார்.

    பாம்பு வி‌ஷத்தன்மைக் கொண்டது. அதை 10 பேர் சூழ்ந்துக் கொண்டு அடித்தால் பாம்பு பலமானது என கூற முடியுமா? எனவே பா.ஜ.க. ஆபத்தான கட்சிதான்.அதற்கான பதிலை ரஜினி காந்த் நேரடியாக கூற வேண்டும்.



    பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் ஒன்று சேர்ந்து தீர்மானித்திருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. தேர்தல் எப்போது நடந்தாலும், அதை எதிர்கொள்ள விடுதலை சிறுத்தைகள், தி.மு.க. இடது சாரிகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணியினர் தயாராக உள்ளோம். எங்களது கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்.

    திருச்சி மாநாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மற்றும் சீதாராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி, சந்திரபாபுநாயுடு உள்ளிட்ட பல மாநில தலைவர்களை அழைத்துள்ளோம். அவர்களும் பங்கேற்பார்கள் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #Thirumavalavan
    சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் 2.0 படத்தின் டீசர் வெளியானது. #Rajinikanth #2PointO #2PointOTeaser
    ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்துள்ளனர்.

    இப்படத்தை நவம்பர் மாதம் 29-ம் தேதி வெளியிட இருப்பதாகவும் இயக்குனர் சங்கர் அறிவித்தார். மேலும் இப்படத்தின் டீசரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தார்.

    அதன்படி, ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தின் டீசர் இன்று  காலை 9 மணியளவில் வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. #Rajinikanth #2PointO #2PointOTeaser
    ரஜினி மக்கள் மன்றத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தை புதிய நிர்வாகிகள் நடத்தி இருப்பதால் ராஜூ மகாலிங்கம், சுதாகருக்கு ரஜினி தடை விதித்திருக்கிறாரோ? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. #RajuMahalingam #RajiniMakkalMandram
    சென்னை:

    அரசியல் களத்தில் குதித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்க உள்ளார். மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் நியமனத்தை முடித்துள்ள ரஜினி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி இருக்கிறார்.

    இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ரஜினி மக்கள் மன்றத்தில் சேர்ந்துள்ள நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    காலா படத்துக்கு பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஜினி, அது போன்று வேகத்தை காட்டவில்லை. அரசியல் கட்சியை தொடங்குவது எப்போது? என்கிற அறிவிப்பை வெளிப்படையாக இன்னும் அறிவிக்காத ரஜினி, மன்ற நிர்வாகிகள் கூட்டத்திலும் கலந்து கொள்ளாமலேயே உள்ளார்.

    புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கு பின்னர் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் மாவட்டம் வாரியாக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    கடலூர், திருச்சி, பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட 18 மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் முடிந்துள்ள நிலையில் இன்றும், நாளையும் நடக்கும் கூட்டத்தில் மீதி உள்ள 12 மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

    இது நாள் வரையில் இந்த கூட்டத்தை நடத்தி வந்த மாநில செயலாளர் ராஜூ மகாலிங்கம், பொறுப்பாளர் சுதாகர் ஆகியோர் புதிய நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு பதில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அமைப்பு செயலாளரான டாக்டர் இளவரசன், முன்னாள் போலீஸ் அதிகாரியான ராஜசேகர், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் கூட்டத்தை நடத்துகின்றனர்.

    கடந்த சில நாட்களாகவே ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மீது மாவட்ட பொறுப்பாளர்கள் புகார் கூறி வந்தனர். மாநில செயலாளரான ராஜூ மகாலிங்கம் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதனை இன்னொரு முக்கிய நிர்வாகியான சுதாகர் மறுத்தார்.

    இந்த நிலையில் இவர்கள் 2 பேருக்கு பதிலாக மாவட்ட பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டத்தை புதிய நிர்வாகிகள் நடத்தி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் ராஜூ மகாலிங்கம், சுதாகர் இருவருக்கும் ரஜினி தடை விதித்திருக்கிறாரோ? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

    பொறுப்பாளர்களை வழிநடத்துவதற்காக முதன் முதலாக போடப்பட்ட நிர்வாகிகளான ராஜூ மகாலிங்கம், சுதாகர் ஆகியோர் திடீரென ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் நிர்வாகிகள் மத்தியில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-


    காலா படம் முடிந்ததும் ரஜினி அதிரடியாக அரசியலில் ஈடுபடுவார் என்கிற எண்ணம் அவர் மீண்டும் படப்பிடிப்புக்கு சென்றதும் நொறுங்கிப் போனது.

    நிர்வாகிகள் நியமனம் முடிந்ததும் ரஜினி எங்களையெல்லாம் சந்திப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம். அதுவும் நடக்கவில்லை. ரசிகர்களின் எண்ண ஓட்டங்களை அறிந்த மன்றத்தின் மாநில நிர்வாகிகளும் சந்திக்காமல் உள்ளனர்.

    இதுபோன்ற நடவடிக்கைகளால் அரசியல் பணிகளில் திருப்தி இல்லாமலேயே இருக்கிறோம். எங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ரஜினிகாந்த் அடுத்த முறை சென்னை வரும் போது நிர்வாகிகளை சந்திக்க வேண்டும். அப்போது தான் மாநிலம் முழுவதும் உள்ள பொறுப்பாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். புதிய கட்சியை தொடங்கி ரஜினி உடனடியாக தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #RajuMahalingam #RajiniMakkalMandram #Rajinikanth
    ஒரு படத்தின் வெற்றி ரஜினி, கமல் போன்றோரின் அரசியலை தீர்மானிக்காது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #TNMinister #Jayakumar #Kaala #Rajinikanth
    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    உலக கடல் தினம் மீன்வளத்துறை சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடல் விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடத்தப்பட்டது. அதில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    இன்று உலக பொம்மைகள் தினம். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் உலகமே ஒரு நாடகமேடை. இதில் அனைவரும் பொம்மைகள். மனிதர்கள் வெறும் பொம்மைகளாக இல்லாமல் சமுதாயத்திற்கு படைப்பாளிகளாக இருக்க வேண்டும்.

    கடல் தூய்மை குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு இருந்தாலே போதும். மக்கள் மனதில் மாற்றம் தேவை. அதே போல் அனைத்து துறைமுகங்களிலும் சுத்தமாக இருப்பது குறித்து போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கடலில் பிளாஸ்டிக் கலக்காமல் இருக்க சென்னை மாநகராட்சி மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கனிமொழிக்கு காற்று தான் ஞாபகத்திற்கு வரும். ஏனென்றால் அவர் 2ஜி அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டவர்.


    ஒரு படத்தின் வெற்றி ரஜினி, கமல் போன்றோரின் அரசியலை தீர்மானிக்காது. ஒரு தலைவரை ஏற்றுக் கொள்வது என்பது அவர்கள் மக்களுக்கு ஆற்றும் பணி மற்றும் கொள்கைகள் மூலம் தீர்மானிக்கப்படுகின்றன.

    மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரை மக்கள் அப்படித்தான் ஏற்றுக் கொண்டனர். மத்திய மந்திரியாக இருந்து கொண்டு பொன்.ராதா கிருஷ்ணன் கூறும் கருத்தை ஏற்க முடியாது. அவர் மத்திய அமைச்சர் என்ற பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். சாதாரண மனிதர் போல தெருவில் செல்பவர் போல் பேசக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Jayakumar #Kaala #Rajinikanth
    கமல்ஹாசனும், ரஜினி காந்த்தும் சுயநலவாதிகள் என்றும் இவர்களை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்றும் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். #Rajinikanth #KamalHaasan #Eswaran
    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டாமென்றும், இரு மாநில முதலமைச்சர்களும் பேசி தீர்வுக்காண வேண்டுமென்றும் நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தினால் மட்டுமே கர்நாடகாவில் காலா படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் திரையிட முடியும் என்று கன்னட திரைப்பட வர்த்தக சபை நிபந்தனை விதித்திருக்கிறது.

    கமல்ஹாசனும் தன்னோட விஸ்வரூபம் 2 படம் கர்நாடகாவில் திரையிட எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே சந்திப்பை நிகழ்த்தியிருப்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. கமல்ஹாசன் காவிரிக்காக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்தேன் என்பதெல்லாம் அப்பட்டமான பொய். கன்னட திரைப்பட வர்த்தக சபை ரஜினிகாந்துக்கு விதித்திருக்கும் நிபந்தனையை தான் கமல்ஹாசன் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்த பிறகு அளித்த பேட்டியில் காவிரி பிரச்சனையில் இரு மாநில முதலமைச்சர்களும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுக்காண வேண்டும் என்று கூறியிருக்கிறார்.


    காவிரிக்காக என்று சொல்லிவிட்டு கமல்ஹாசன் தன்னோட விஸ்வரூபம் 2 படத்திற்காக தான் சென்றிருக்கிறார் என்று நாங்கள் சந்தேகித்தது உறுதியாகி இருக்கிறது. தமிழகம் போராடி பெற்ற உரிமைக்கு எதிராகவும், மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் காவிரி மேலாண்மை ஆணையம் பற்றி கருத்துக்கூறி கர்நாடகாவிலேயே அவர்களின் நிபந்தனையை கமல்ஹாசன் நிறைவேற்றி விட்டு வந்திருப்பது தமிழகத்திற்கு இழைத்திருக்கும் மாபெரும் துரோகம்.

    அதேபோல ரஜினிகாந்தும் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஆதரவளித்தது காலா படத்திற்கு மேலும் கர்நாடகாவில் எந்த விதமான பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதற்காகவா?. சுயநலவாதிகள் அல்லவா இவர்கள். இவர்களை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து விடக்கூடாது.

    தங்கள் சுயலாபத்திற்காக அரசியலை பயன்படுத்துகிறார்கள் என்பதை தமிழக மக்கள் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Rajinikanth #KamalHaasan #Eswaran
    எல்லோருக்கும் நல்ல கதாநாயகனாக விளங்கியவர், இன்று பலருக்கும் எதிராக, ‘வில்லனாக’ சித்தரிக்கப்படுகிறார் என்று ரஜினியின் ஆன்மிக அரசியல் குறித்து திமுக நாளேடான முரசொலியில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. #Rajinikanth #DMK
    சென்னை:

    தி.மு.க. நாளேடான முரசொலியில் வெளியாகி உள்ள கட்டுரையில் ரஜினி பேட்டி குறித்து விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    அரசியல் களத்தில் முழு மூச்சாக இறங்கும் முன் ரஜினிகாந்த் - ஆழம் பார்க்க எடுத்து வைத்த முதல் அடியிலேயே சறுக்கி விழுந்துள்ளார்.

    அவரது தூத்துக்குடி விஜயம்- அதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டி- பின்னர் விமான நிலையத்தில் நிருபர்கள் மத்தியிலே அவர் ஆத்திரத்தில் வெடித்தது, இவை எல்லாமே அவரது நிலைகுலைந்த தன்மையை வெளிக்காட்டுவதாகவே இருந்தது.

    ஆன்மிக அரசியல் நடத்தப்போவதாக அறிவித்த அவரது ‘ஆன்மிகம்‘ கேள்விக்குறியாகி விட்டது. யாரோ ஒருவர் இயக்க, அதன்படி இயங்கி வெற்றி பெறுவது சினிமாவில் சாத்தியமாகலாம்.

    ஆனால் அரசியலில் அது இயலாத ஒன்று என்பதை அவரது தூத்துக்குடி விஜயமும் அதன் விளைவுகளும் அவருக்குத் தெளிவாக்கியிருக்கும் என நம்புகிறோம்.


    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்து தனது டுவிட்டரில் அவர் பதிவு செய்த கருத்துக்கு முற்றிலும் மாறாக ஒரு கருத்தை பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதையும், அனைத்துக்கும் போராட்டங்கள் கூடாது என்று தூத்துக்குடியில் பேசும் அவர், வர இருக்கும் தனது படத்தில் அனைத்துக்கும் போராடுவோம் என்கிறார்.
    இவையெல்லாம் சுட்டிக்காட்டப்பட்டு சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. இப்படி மாற்றி மாற்றிப் பேசுவதும், செயல்படுவதும்தான் ஆன்மிக அரசியலா என்பதை ரஜினி தான் தெளிவாக்க வேண்டும்.

    பத்திரிகையாளர் சந்திப்பின்போது தன் நிலை மறந்து பதட்டத்தோடு வெடித்துவிட்டு, அதற்கு பலத்த எதிர்ப்பு பல திக்குகளிலிருந்து கிளம்பிய பிறகு வருத்தம் தெரிவித்த ரஜினி, தன் கருத்துக்கு எதிராக மறுப்புத் தெரிவிக்கும் வகையில், மறுநாள் வருத்தம் தெரிவித்துள்ளார்.

    “நான் ஒரு முறை சொன்னால் அது நூறு முறை சொன்ன மாதிரி”- என்று திரைப்படங்களில் ‘பஞ்ச்‘ டயலாக் பேசிய ரஜினிதான், சொன்னதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

    தவறாக தன் நிலை மறந்து உணர்ச்சி வசப்பட்டு வெடித்ததற்கு வருத்தம் தெரிவித்ததை வரவேற்கலாம். ஆனால் அதே நேரத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போரில் வி‌ஷக்கிருமிகள், சமூக விரோதிகள் புகுந்ததாகக் கூறிய கருத்து ஏற்கத்தக்கதா? அந்தப் போராட்டத்தில் புகுந்த ‘வி‌ஷக்கிருமிகள், சமூக விரோதிகளை’த் தனக்குத் தெரியும் என்று தெரிவித்த ரஜினி, அதனை வெளிப்படுத்த தயங்குவதேன்?

    தனக்குத் தெரிந்த விவகாரத்தையும் தெரிவிக்கத் தவிர்ப்பதுதான் ஆன்மீக அரசியலா? ரஜினி விளக்குவார் என எதிர்பார்க்கலாமா?

    “எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழகம் சுடுகாடாகி விடும்” எனக் கருத்து கூறியுள்ளார் ரஜினி. அப்படிக் கேள்வி எழுப்பியிருப்பது எந்த ரஜினி தெரியுமா? விரைவில் வர இருக்கும் தனது திரைப்படமான ‘காலா’ வில் ‘அனைத்துக்கும் போராடுவோம். புரட்சி உருவாக்கப் போராடுவோம்...


    எனப்பாடி நடித்துவிட்டு- நிழலில் ஒன்று, நிஜத்தில் வேறு ஒன்றுஎனச் செயல்படுவதுதான் ஆன்மிக அரசியலா? ரஜினி தெளிவாக்க வேண்டும். அல்லது தெளிவாக வேண்டும்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லப் புறப்பட்டவர், அங்கே சென்றவுடன், பாதிக்கப்பட்டவர்கள் உணர்வுக்கு எதிராகப் பேட்டி அளிக்கிறார்.

    மத்திய-மாநில அரசுகளின் பிரதிநிதிபோல தன்னைப் பிரதிபலித்துக் கொள்கிறார். துப்பாக்கி சூடு நடைபெற்று பல நாட்களுக்குப் பின் திடீரென விழித்து அங்கே செல்கிறார்- சென்று, துப்பாக்கி சூட்டுக்கு நியாயம் கற்பிக்கிறார்.

    போராட்டத்துக்கு எதிராக விமர்சனங்களை வைத்ததே, அவர் யாராலோ ஏவப்பட்ட அம்பாகச் செயல்படுகிறார் என்பதைத் தெளிவாக்கவில்லையா?

    இதனைத்தான் தெளிவாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிப்படுத்தி உள்ளார். ரஜினியின் குரல் அல்ல, அது வேறு யாருடைய குரலாகவோ தெரிகிறது என்று.

    அரசியல் சூட்டின் வேகத்தை ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அனுபவித்து அடக்கி வாசித்த ரஜினி. அவர் அன்று நேரிடையான அரசியல்வாதி அல்ல. ஆனால் இன்று யாருடைய அச்சறுத்தலுக்கோ பயந்து அரசியல் களத்தில் குதிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

    எல்லோருக்கும் நல்ல கதாநாயகனாக விளங்கியவர், இன்று பலருக்கும் எதிராக, ‘வில்லனாக’ விமர்சிக்கப்படுகிறார். அரசியலில் உமிழும் வெப்பங்களைத் தாங்கும் பக்குவத்தை ஏற்றிட உடல் உரம் மட்டுமின்றி, உள்ள உரமும் தேவை.

    ஆன்மிக அரசியல் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு அதனை எதிர்கொள்ள எண்ணினால் வெந்து போக நேரிடும் என்பதை ரஜினி உணர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Rajinikanth #DMK
    ×